முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம் செய்திகள்

ஊரடங்கால் குறைந்த மின்சார பயன்பாடு!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் மின்சார பயன்பாடு 0.2 சதவீதம் குறைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு நிதியாண்டில் மின்சார பயன்பாடு குறைந்துள்ளதாக ராயட்டர்ஸ் நிறுவனம் மத்திய அரசு ஆவணங்களை கொண்டு நடத்திய ஆய்வில் இதனை கண்டறிந்துள்ளது.
அதில் கடந்த 35 ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் மின்சார உற்பத்தி 0.2 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதுவே மின் பயன்பாடு குறைந்ததற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்த காரணத்தால் மின்சார பயன்பாடு 0.2 சதவீதம் குறைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போது மத்திய அரசு இந்தியாவில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த நிலையில் தொழிற்சாலைகள் செயல்பட ஆரம்பித்துவிட்டன. இதனைத் தொடர்ந்து மின்சார பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குட்கா முறைகேடு – வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு அனுமதி

Web Editor

மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான சோதனை முயற்சி தொடர்கிறது – முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்

Arivazhagan Chinnasamy

அதீத உடற்பயிற்சி மாரடைப்புக்கு காரணமா? என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்

EZHILARASAN D