முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் கூட்டணி விவரம்!

அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில் இதுவரை எந்தெந்தக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற முழு விவரம் பின்வருமாறு…

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் கட்சி ஆகிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. முஸ்லீம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தவிர, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதி தமிழர் பேரவை மற்றும் மக்கள் விடுதலை கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி எனக் கூட்டணிக் கட்சிகளுக்கு 57 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் ஐஜேகேவுக்கு 40 தொகுதிகளும் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் கூட்டணி இன்றி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. 

Advertisement:

Related posts

நாளை விடுதலையாகிறார் சசிகலா!

Niruban Chakkaaravarthi

ஒரு ஊழல் கட்சிக்கு இன்னொரு ஊழல் கட்சி மாற்றாக இருக்க கூடாது: கமல்ஹாசன்!

Saravana Kumar

மீண்டும் தடம் பதித்த நடராஜன்: இந்திய அணி வெற்றி

Niruban Chakkaaravarthi