தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஈரடுக்கு பாதுகாப்பு!

வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, ஈரடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா…

வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, ஈரடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, இன்று மாலைக்குள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் ஆகியவை, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பப்பட்டுவிடும் எனக் கூறினார்.

வாக்குப்பதிவு நாள் அன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே, வாக்குப்பதிவை கண்காணிக்க உள்ளதாகவும், வாக்குச்சாவடிகளுக்கு திடீர் ஆய்வு செல்லும் திட்டமில்லை, எனவும் தெரிவித்தார். வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, ஈரடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.