தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 11 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 10,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 88 ஆயிரத்து 746 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 066 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 10,448 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து 21 ஆயிரத்து 058 பேர் குணமடைந்துள் ளனர். இதுவரை 22 லட்சத்து 44 ஆயிரத்து 073 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 270 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,338 ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 பேர் உயிரிழந்துள்ளனர். 1558 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஈரோட்டில் 1123 பேருக்கும் செங்கல்பட்டில் 456 பேருக்கும் திருப்பூரில் 608 பேருக்கும் சேலத்தில் 693 பேருக்கும் கோவையில் 1420 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.







