வெல்டிங் மிஷன் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநில திருடர்கள்!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிகாலையில் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மிஷின் கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இரண்டு வடமாநில திருடர்களை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள…

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிகாலையில் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மிஷின் கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இரண்டு வடமாநில திருடர்களை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள பகுதி என்பதால் அதிகளவில் லாரி ஓட்டுநர்கள் இந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஜோடுகுளி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் தனது வீட்டில் ஒரு பகுதியை ஏடிஎம் மையத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு மூன்று பேர் ஏடிஎம் மையத்ததிற்கு வந்த இரண்டு பேர் சட்டரை இறக்குவதை பார்த்த செல்வம், கொள்ளையடிக்க முயற்சிபதை அறிந்து உடனடியாக ஏடிஎம் மையத்தின் சட்டரை இறக்கி பூட்டியுள்ளார்.

இதை பார்த்தவுடன் வெளியே இருந்த நபர் தனது இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினார்.  இது குறித்து செல்வம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார் ஏடிஎம் மையத்தின் கதவைத் திறந்து உள்ளே இருந்த இரண்டு பேரை கைது செய்தனர்.

மேலும் இவர்கள் ஏடிஎம் மிஷின் உடைப்பதற்காக கேஸ் சிலிண்டர்,வெல்டிங் மிஷின் பயன்படுத்தி வெட்டியது தெரிய வந்தது மேலும் கேமராவில் உருவம் தெரியாமல் இருக்க ஸ்ப்ரே பெயிண்ட் அடித்து கேமராவை மறைத்துள்ளனர்.

கொள்ளையடிக்க வந்த இரண்டு இளைஞர்களும் வட மாநிலத்தவர்கள் என்பதால் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.