முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வாக்குக்கு பணம் கொடுக்காத நிலை வர வேண்டும்- விஐடி பல்கலை. வேந்தர் விஸ்வநாதன்

பணம் கொடுத்து ஓட்டு பெறுவது இந்தியாவில் மட்டும். அதுவும் தென்மாநிலங்களில் மட்டுமே நடக்கிறது. நல்ல மக்களாட்சி கொண்டு வர ஓட்டுக்கு பணம் வேண்டாம் என்ற நிலை வர வேண்டும் என வி.ஐ.டி. பல்கலைகழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் சார்பில் 3 நாட்கள் இலக்கிய விழா நடைபெற்று வருகிறது. 30-ம் ஆண்டு இலக்கிய விழாவில் சிறப்பு அழைப்பாளராக வி. ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், தமிழனாக பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டு. உலகத்திலே பேசப்படக்கூடிய 7,300 மொழிகளில் என்றைக்கும் மாறாமல் அழியாமல் உள்ள ஒரே மொழி தமிழ் மொழி மட்டுமே. தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் எல்லாம் பெருமைப்பட வேண்டும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களில் பெயர் பட்டியல்களை பார்த்தால் 10 கூட தமிழ் பெயர்கள் தேறாது. இது தமிழுக்கு வந்துள்ள சோதனை. எனவே தமிழ்நாட்டில் தமிழில் பெயர்களை சூட்ட வேண்டும். கடந்த 1967ம் ஆண்டு நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போது ரூ.50 ஆயிரம் செலவு செய்தேன். ஆனால் இன்று ஒரு நகரமன்ற உறுப்பினர் ரூ.5 லட்சம், நகர்மன்ற தலைவர் ரூ.50 லட்சம் செலவு செய்கிறார்கள். இந்த சூழலுக்கு காரணம் மக்கள் தான்.நல்ல மக்களாட்சி கொண்டு வர ஓட்டுக்கு பணம் வேண்டாம் என்று கூறி நம்மில்
திறமையான, மக்களுக்கு சேவை செய்யும் ஒருவரை சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய வேண்டும். பணம் கொடுத்து ஓட்டு பெறுவது இந்தியாவில் மட்டும். அதுவும் தென்மாநிலங்களில் மட்டுமே நடக்கிறது. அதிலும் கேரளாவில் ஒட்டுக்கு பணம் கொடுப்பதில்லை.

இந்த நிலை தமிழ்நாட்டிலும் வர வேண்டும். இன்று அரசு அலுவலகம் சென்றால் எதற்கெடுத்தாலும் பணம் கொடுத்து தங்கள் பணிகளை முடித்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. அந்த நிலை மாற வேண்டும் என்றால் அரசு வேலை, பணியிட மாற்றம், பதவி உயர்வு ஆகியவற்றை பணம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

அமைச்சர்கள் பொறுப்பேற்கும் போது எவ்வளவு சொத்துக்கள் வைத்துள்ளார்களோ அதே சொத்துக்கள் வெளியே போகும் போது இருந்தால் நாட்டில் பல பிரச்னைகள் இருக்காது. மக்கள் எந்த பணிக்கு சென்றாலும் பணம். இல்லாமல் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். அப்போது தான் உண்மையான மக்களாட்சி நடக்கும் என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதல்வராக நாளை பொறுபேற்கிறார் மம்தா பானர்ஜி!

2024 தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் சோனியா

EZHILARASAN D

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா? – தேசிய தேர்வு முகமைக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி

Nandhakumar