“மாலை டும் டும்” பாடலுக்கு நடனமாடி அசத்திய ஜப்பானிய பெண்கள்…

“மாலை டும் டும்” என்ற தமிழ் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய ஜப்பானிய பெண்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஷால், மிருணாளினி ரவி, ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் “எனிமி “.…

“மாலை டும் டும்” என்ற தமிழ் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய ஜப்பானிய பெண்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஷால், மிருணாளினி ரவி, ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் “எனிமி “. இந்தப் படத்தில் வரும் மாலை டும் டும் என்ற பாடல் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. பிரபலங்கள் பலரும் இந்தப் பாடலூக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. சமீபகாலமாகவே தமிழ் படங்களின் பாடல்களுக்கு ஜப்பானியர்கள் நடனமாடும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில், ஜாஸ்மின் டன்கோட்ரா, மாயோ ஜப்பான் என்கிற ஜப்பானிய பெண்கள் இருவர் மாலை டும் டும் பாடலுக்கு நளினமாக ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது லைக்குகளை குவித்து வருகிறது. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.