முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்- அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி இல்ல ஆதரவற்றோர் மற்றும் மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த முதியோர்கள் அடித்து துன்புறுத்தப் பட்டதாகவும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் பல புகார்கள் வெளியாகின. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் கெடார் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்தவர்கள் உடலுறுப்புகளுக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.

இந்த ஆசிரமத்தில் இருந்து ஜபருல்லா என்பவர் காணாமல் போயுள்ளர். விசாரணையில் அவருடன் 52 பேர் பெங்களுரு ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கும் 14 பேரை காணவில்லை. ஜபருல்லாவும் அங்கிருந்து தப்பி சென்றதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களின் மரணம் தொடர்பாக முறையான ஆவணங்கள் இல்லை. கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு என 3 மாநிலங்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளதால், அன்புஜோதி ஆசிரம வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”- சத்யபிரதா சாகு!

Jayapriya

பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் ஏன் வெற்றி பெறவேண்டும்?; அன்புமணி ராமதாஸ்

G SaravanaKumar

செங்கல்பட்டு பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

Web Editor