திமுகவில் ஏக்நாத் ஷிண்டே போல் யாருமில்லை-அண்ணாமலைக்கு திமுக எம்.பி. பதிலடி

திமுகவில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே போல் யாருமில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் மற்றொரு…

திமுகவில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே போல் யாருமில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் மற்றொரு ஷிண்டே வெளியே வருவார் என்று நேற்று அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில் அவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  அப்துல்லா எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, தனது தொகுதி மேம்பாட்டு
நிதியிலிருந்து புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் 6 இடங்களில் தலா 6 லட்சம்
ரூபாய் மதிப்பில் சின்டெக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா
இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பொது மக்களுக்களின் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டிகளை அப்துல்லா திறந்து வைத்தார்.

இதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.
அப்துல்லா கூறியதாவது:

மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் 2 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஒதுக்கப்பட்டது. அதனை முழுவதுமாக புதுக்கோட்டை நகரில் பல்வேறு மக்கள் திட்டப் பணிகளுக்கு வழங்கி விட்டேன். அடுத்த 2 ஆண்டுகளில் கொரோனா காலமாக நிதி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 5 கோடி ரூபாய் நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்
செய்யப்படவுள்ளது என்றார் அப்துல்லா.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

வழக்கிலிருந்து மோடி மற்றும் அமித்ஷா விடுவிக்கப்பட்ட நிலையில் நடிகரும் பாஜக பிரமுகருமான ராதாரவி இருவரையும் குற்றவாளி என்று கூறியுள்ளதற்கு அக்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் பதில் கூற வேண்டும்.

சாயாஜி ஷிண்டே என்று ஒரு நடிகர் உள்ளார். அவரும் திமுகவில் இல்லை. எனவே எந்த ஷிண்டேவும் திமுகவை விட்டு வருவதற்கு வாய்ப்பில்லை என்றார் அப்துல்லா.

நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் மற்றொரு ஏக்நாத் ஷிண்டே தமிழகத்தில் வெளியே வருவார் என்று கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனை கட்சியில் இருந்து அதிருப்தி அடைந்து ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்து முதலமைச்சர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பாஜக கூட்டத்தில் பங்கேற்ற ராதாரவி, இந்தியாவில் இரண்டு பெரும் அக்ஸ்யூட்கள் உள்ளனர் என்று பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.