பிணத்தை வைத்து யூடியூபர்கள் பிழைக்கிறார்கள் – கே.ராஜன் ஆதங்கம்

பிணத்தை வைத்து யூடியூபர்கள் பிழைக்கிறார்கள் என தெற்கத்தி வீரன் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் ஆதங்கம். சந்திரபாபு பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் புதுமுகம் சாரத், நடிகராகவும், இயக்குனராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் திரையுலகில்…

பிணத்தை வைத்து யூடியூபர்கள் பிழைக்கிறார்கள் என தெற்கத்தி வீரன் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் ஆதங்கம்.

சந்திரபாபு பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் புதுமுகம் சாரத், நடிகராகவும், இயக்குனராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் திரையுலகில் அறிமுகமாகும் திரைப்படம் தெற்கத்தி வீரன். முழுமையான பொழுதுபோக்கு, ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் K ராஜன் பேசுகையில்

பிணத்தை வைத்து யூடியூபர்கள் பிழைக்கிறார்கள். தமிழ் திரையில் சிறந்து விளங்கிய நடிகை மீனா கணவர் இறப்பில் பணம் சம்பாதிக்கிறார்கள் அதை பார்க்க மனது கஷ்டமாக இருக்கிறது. இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்தப்படத்திற்கு தமிழில் தலைப்பு வைத்திருப்பது மிகச்சிறப்பான விஷயம். இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா உடைய இசை இந்த படத்திற்கு சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு என அனைத்தையும் சாரத் செய்துள்ளார். அவருடைய திறமையை நான் பாராட்டுகிறேன் என்றார்.

இயக்குனர் பாக்யராஜ் பேசுகையில்

ஶ்ரீகாந்த் தேவா எப்பொழுதும் குத்துபாட்டு போட்டுகொண்டிருந்தார், இந்த படத்தில் மெலடி பாட்டு போட்டிருப்பது எனக்கு பிடித்தமானதாக இருந்தது. அவர் இதை தொடர வேண்டும். விருது வென்ற நிறைய தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் இருக்கின்றனர், அது எனக்கும் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. இயக்குநர் யாரிடமும் வேலை பார்க்காமல், இயக்குனராக மாறியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது, அவரது பாடல் வரிகளும் சிறப்பாக இருக்கிறது. இந்த கதை உண்மை சம்பவம் என்று கூறினார்கள், அதற்கு வாழ்த்துகள். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்.

இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பேசுகையில்

படத்தின் அனைத்து பாடல்களையும், இயக்குனர் சாரத் தான் எழுதியுள்ளார். ஒரு புது கவிஞர் போல் அவரது எழுத்து இருந்தது. இயக்குநருக்கு யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என தெரியும். படத்தின் நாயகனாகவும், தயாரிப்பாளரவும், நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இசை சிறப்பாக வந்துள்ளது. படத்தில் மொத்தம் ஐந்து பாட்டுகள் இருக்கிறது. படம் சிறப்பாக வந்துள்ளது. நீங்கள் ஆதரவு தாருங்கள் என்றார்.

ஜாக்குவார் தங்கம் பேசுகையில்

ஒரு நல்ல நடிகன் கிடைத்துவிட்டார் என்று தான் கூற வேண்டும். படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் தங்களது முழு அர்பணிப்பையும், பங்களிப்பையும் கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா உடைய இசை அபாரமாக உள்ளது. கண்டிப்பாக அவருக்கு இந்த படத்திற்காக விருது கிடைக்கும். விஜயகாந்துக்கு அப்புறம் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக, இந்த படத்தின் ஹீரோ இருக்கிறார் என்றார்.

 

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.