தாம்பரம் அருகே வீட்டில் பெண்ணை கட்டிப்போட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற உறவினர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தாம்பரம் அடுத்த அகரத்தை சேர்ந்த ரவி, சுகுணா தம்பதிக்கு புஷ்பலதா என்ற மகள் உள்ளார். கடந்த மாதம் 23-ஆம் தேதியன்று புஷ்பலதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டுக்குள் புர்கா போட்டு நுழைந்த பெண்ணுடன் வந்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, புஷ்பலதாவின் கை, கால்களை கட்டி வைத்து, பீரோவில் இருந்த ஏழு சவரன் தங்க நகைகளுடன், ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் ரவி, வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடித்தது, அவரது மனைவியின் உறவுக்கார பெண் மற்றும் கணவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.