கோவை கோட்டைமேடு பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிடப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
“நாங்கள் கொங்கு மண்டலத்தை மட்டும் டார்கெட் செய்யவில்லை. தமிழகம் முழுவதும் டார்கெட் செய்கிறோம். சந்தித்து பேசுவதால் அழுத்தம் என்று ஆகிவிடாது. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. எல்லாரும் போய்விட்டார்கள் என வருத்தப்பட்டிருக்கிறார்கள். அனைவரும் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
பராசக்தி படம் ரிலீஸ் ஆனது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியவில்லையா. பராசக்தி படம் எப்படி ரிலீஸ் ஆனது. பராசக்தி படத்தில் அண்ணா பேசிய வசனம் மியூட் செய்யப்பட்டது தொடர்பாக பயமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.







