முக்கியச் செய்திகள் சினிமா

வெளியானது ‘மாநாடு’- சிம்பு ரசிகர்கள் உற்சாகம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை. பிறகு மாநாடு நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இதற்கிடையில் திடீரென நேற்று மாலையில் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் ‘மாநாடு’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாகவும், வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “உங்களின் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. மாநாடு நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகும்” என அறிவித்திருந்தார்.

இதையடுத்து நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் ‘மாநாடு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக நள்ளிரவு முதலே காத்திருந்தனர். இந்த நிலையில் அனைத்து திரையரங்குகளிலும் காலை 5 மணிக்கு வெளியாகும் சிறப்பு காட்சி ரத்து செய்யப்படுவதாக திரையரங்குகளின் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால், திரையரங்குகளில் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், காலை 8.00 மணிக்கு முதல் காட்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திரையரங்குகளில் ரசிகர்களின் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு இடையில் ‘மாநாடு’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்பி.க்கள்!

Halley karthi

புதிய விதிகளின்படி அதிகாரிகளை நியமித்துள்ளது ட்விட்டர்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Ezhilarasan

மக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Halley karthi