போதிய அளவு தக்காளி பயிரிடாததே விலை ஏற்றத்திற்கு காரணம்; விவசாயி வேதனை

தொடர் மழை காரணமாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை ஏற்றம் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், தக்காளி…

தொடர் மழை காரணமாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை ஏற்றம் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், தக்காளி விலை ஏற்றத்திற்கு காரணம் என்ன? விவசாயிகள், வியபாரிகள் சொல்லும் தீர்வு என்ன? – “எகிறும் தக்காளி விலை” என நியூஸ் 7 தமிழ், இன்று தொடர் நேரலையை பல்வேறு பகிதிகளில் இருந்து வெளியிட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தர்மபுரி பாலக்கோடு, பகுதியில் இருந்து விவசாயிகள் மற்றும் வியபாரிகள் கூறுவதாவது; “தொடர்ந்து இருபது நாட்களுக்கு மேலாக பெய்த மழையால், தக்காளி செடிகள் உடைந்தும், அழுகியும் இருந்ததால், பெரிய அளவில் மகசூழ் கிடைக்கவில்லை. இதானல், இந்த விலை ஏற்றம் ஏற்படுள்ளது.

வழக்கமாக 200 முதல் 300 டன் தக்காளி இந்த சந்தைக்கு வரும் ஆனால், தற்போது மிக குறைவாகவே வருகிறது. கொரோனா காரணமாக மக்கள் அதிக அளவு தக்காளி பயிரிடாததும் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம்.

கடந்த மாதம் 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 60 முதல் 80 ரூபாய்-க்கு மேலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த சந்தையை பொருத்தவரையில் பலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மட்டுமே தக்காளி கொண்டு வரப்படுகிறது.” என இந்த பகுதி வியபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.