‘ஜனநாயகன்’ மீது தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி – மாரி செல்வராஜ்!

தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாத ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக இயக்குனர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜன நாயகன்’ நேற்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்ற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம், நம் ஜனநாயகத்தின் மீதும், நம் படைப்புச் சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.