முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து

சென்னையில் மின்சார ரயில் சேவையில் இன்று மற்றும் 31-ஆம் தேதி, நவம்பர் 7-ஆம் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பரமாரிப்பு பணிகளுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11 மணிமுதல் மதியம் 2.30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும், தாம்பரம்-கடற்கரை இடையே காலை 11.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15 மணி, மதியம் 12, 1, 1.20, 2, 3 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், கடற்கரை-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.15, 11 மணி, மதியம் 12.25, 1.25, 2.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக மதியம் 1.30 மணிக்கு திருமால்பூரில் இருந்து கடற்கரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மாநிலங்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடு: வெங்கையா நாயுடு கண்ணீர்

Gayathri Venkatesan

பாதுகாப்பு குறைபாடு; நீண்ட ஆயுள் வேண்டி சிறப்பு வழிபாடு

Halley Karthik

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்கிறார்!

Gayathri Venkatesan