செல்போன் டவரில் ஏறி போரட்டத்தில் ஈடுபட்ட பெண்!

கரூரில் செல்போன் டவரில் ஏறி பெண்மணி ஒருவர் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி (55). முட்டை வியாபாரியான செல்வி…

கரூரில் செல்போன் டவரில் ஏறி பெண்மணி ஒருவர் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி (55).
முட்டை வியாபாரியான செல்வி ஒரு மாதத்திற்கு முன்பு வேடசந்தூர் பகுதியில்
சந்தையில் வியாபாரத்திற்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் மீன் வியாபாரி ஒருவர்
தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேடசந்தூர் காவல் நிலையம் உரிய
நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில்
ஈடுபட்டார்.

போலீசார் மற்றும் மகன், மகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர்
ஒலிபெருக்கியில் வரச் சொல்லியும் தொடர்ந்து கீழே இறங்கி வர மறுத்த
அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழிறங்க செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.