மயிலாடுதுறையில் சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட 1 டன் குல்பி ஐஸ்
பறிமுதல் செய்து நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை பனந்தோப்பு தெருவில் அரசின் அனுமதி பெறாமல் ஐஸ் பேக்டரி செயல்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்தில் இன்று நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் சோதனை செய்தனர். அப்போது கடந்த இரண்டு வருடங்களாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ரெஜிவான் அலி மற்றும் பத்ருள் உசேன் ஆகிய இரண்டு பேர் குல்பி ஐஸ் தயாரிப்பது தெரிய வந்தது.
சுகாதாரமற்ற முறையில் ஐஸ் தயாரித்தது தெரிய வந்ததால் அங்கு தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு டன் அளவிலான குல்பி ஐஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது சம்பந்தமாக தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.







