உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கம்: கேரளாவில் இளம்பெண் கைது!

கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்தில் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்த முயன்ற ரூ.1.17 கோடி மதிப்பிலான தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.  சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம்…

கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்தில் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்த முயன்ற ரூ.1.17 கோடி மதிப்பிலான தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் மலப்புரம் கரிப்பூர் விமானம் நிலையம் வந்த இளம் பெண் ஷப்னா என்பவரை
சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர், அவர் உள்ளாடையில் தங்கம் மறைத்து
வைத்திருந்ததை உறுதி செய்த அதிகாரிகள் உள்ளுர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில் வெளியே வந்த ஷப்னா உள்ளாடையில் இருந்த தங்கத்தை வெளியே
எடுத்து காரில் மறைத்து வைத்தார், விசாரணைக்காக காரில் இருந்து வெளியே வந்த ஷ்ப்னாவிடம் போலீசார் சோதனை செய்த போது அவரிடம் இருந்து தங்கம் கிடைக்காத நிலையில் போலிசார் காரை சோதனை செய்தனர்,

அதில் 1884 கிராம் தங்கக் கலவை கொண்ட பாக்கெட்டை பேடு வடிவில் கண்டு
பிடித்தனர்.விசாரணையில் அந்த பெண் கோழிக்கோடு குன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது, கடத்தி வரப்பட தங்கத்தின் மதிப்பு ரூ 1.17 கோடி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.