கர்நாடக மாநிலத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று நீா்வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2266 கன அடி தண்ணீரும் கபினி அணையில் இருந்து 4 ஆயிரத்து 333 கன அடி தண்ணீரும் என 6,599 கன அடி நீர் கர்நாடக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவான 124.9 அடியில் 100 அடியை எட்டியுள்ளது. மேலும் கபினி அணை 84 அடி கொள்ளளவில் 79 அடியை எட்டியிருக்கிறது.
கா்நாடகவில் மழை அதிகமாக பெய்துவருவதால் அணைகள் நிறைந்து தண்ணீரை அப்படியே வெளியேற்றும் நிலை ஏற்படுவதால்ம் அதன் காரணமாக இன்னும் 2 வாரங்களில் தண்ணீா் வரத்து 50 ஆயிரம் கனஅடிவரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.







