மது கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருந்த போலீசார் பணியிடை நீக்கம்

திருத்துறைப்பூண்டியில் மது கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக 6 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தது.…

திருத்துறைப்பூண்டியில் மது கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக 6 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஜூலை 4ம் தேதி திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் பகுதியில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடலில் மறைத்து வைத்து புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த ரமேஷ் மற்றும் மனோகரன் என்பவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு மேற்கொள்ளாமல் அவர்களை விடுவித்ததாக கூறி திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஞான சுமதி, உதவி ஆய்வாளர் வரலட்சுமி, தலைமைக் காவல் அலுவலர் சண்முகநாதன், ராஜா காவலர்கள் பாரதிதாசன் விமலா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி பர்வேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.