பல் பிடுங்கப்பட்ட விவகாரம் : பிறழ் சாட்சியாக மாறியது ஏன்? – நியூஸ்7 தமிழுக்கு சூர்யா பிரத்யேக பேட்டி

போலீசார் மிரட்டியதாலேயே தான் பிறழ் சாட்சியாக மாறியதாக பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யா தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

போலீசார் மிரட்டியதாலேயே தான் பிறழ் சாட்சியாக மாறியதாக பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யா தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டார். ஏற்கனவே முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்த அமுதா, 2வது கட்ட விசாரணையை தொடங்கினார்.

விசாரணையின் போது, மாரியப்பன், சுபாஷ், இசக்கிமுத்து, வேத நாராயணன், செல்லப்பா மற்றும் மாரியப்பன் ஆகிய 6 பேர் ஆஜராகினர். இந்த 6 பேருடன் சண்டையிட்ட எதிர் தரப்பினரும் விசாரணைக்கு நேரில் வருகை தந்த நிலையில், மொத்தம் 12 பேர் விசாரணைக்கு ஆஜராகினர். பின்னர் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : மீண்டும் எகிறிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 10,000 பேருக்கு தொற்று உறுதி!

நேற்று முன்தினம் சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி விசாரணை அதிகாரியிடம் தனது பேரனை காணவில்லை என்றும், காவல்துறை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், சுமார் 45 ஆயிரம் பணம் கொடுத்து காவல்துறைக்கு ஆதரவாக தகவல் சொல்லச் சொல்லியதாகவும் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், பிறழ் சாட்சியாக மாறிய சூர்யா நேற்று தனக்கு பாதிப்பு நேர்ந்ததாக, தமிழ்நாடு அரசின் சிறப்பு விசாரணை அதிகாரி அமுதாவிடம் வீடியோ கால் மூலமாக வாக்குமூலம் அளித்துள்ளார். கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் வைத்து தனது பல் பிடுங்கப்பட்டது குறித்து வீடியோ கால் மூலமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சூர்யா, சிறப்பு விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் அனுப்பிய அம்பாசமுத்திரம் வட்டாட்சியரிடம் நேரடியாக வீட்டில் வைத்தும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். காவல்துறையால் தான் பாதிக்கப்பட்டதாக அதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த சூர்யா, கேமராவை உடைத்த விவகாரத்தில், விசாரணைக்காக தன்னை போலீசார் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையம் அழைத்துச் சென்றதாகவும், அங்கு தகாத வார்த்தைகளைக் கூறி தன்னை போலீசார் அடித்ததாகவும் தெரிவித்தார். பின்னர் கல் மற்றும் கட்டிங் ப்ளையருடன் வந்த ஏஎஸ்பி பல்வீர் சிங், தங்களது பற்களை பிடுங்கியதாகவும் தெரிவித்தார்.

கேமராவை உடைத்ததற்காக ரூ.50,000 பணம் செலுத்த வேண்டும் என்று போலீசார் தனது குடும்பத்தாரிடம் தெரிவித்ததாக கூறிய சூர்யா, தனது குடும்பத்தாரும் ரூ.45,000 பணம் செலுத்தியதாகவும் கூறினார். கிழே விழுந்து பல் உடைந்ததாக கூறும்படி போலீசார் தன்னை வீடியோ எடுத்ததாகவும், பொய் வழக்கு போடுவோம் என்று மிரட்டியதாகவும் சூர்யா கூறினார். இதனாலேயே தான் பிறழ் சாட்சியாக மாறியதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.