“ருத்ரன்” வெற்றி கொண்டாட்டம்: முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய படக்குழுவினர்!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் நிலையில் அதனை கொண்டாடும் விதமாக படக் குழுவினர் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி செய்தனர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவனம் முதியோர்…

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் நிலையில் அதனை கொண்டாடும் விதமாக படக் குழுவினர் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி செய்தனர்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் படக்குழுவினர் நலதிட்ட உதவிகள் வழங்கினர். நிகழ்ச்சியில் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான கதிரேசன், கதாசிரியர் திருமாறன், நடிகர் இளவரசு ஆகியோர் கலந்து கொண்டு அங்குள்ள முதியோர்களுக்கு அரிசி, பருப்பு, வேட்டி, நைட்டி மற்றும் துண்டு
வழங்கினர்.

மேலும், முதியோர் இல்லத்திற்கு நிதியாக 1 லட்சம் காசோலை வழங்கி, அங்குள்ள முதியோர் அனைவரும் திரைப்படத்தை காண பிரத்தியேகமாக முதியோர் இல்லத்தில் திரையிடப்படவுள்ளது.

—ம.ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.