சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் நேற்று பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது, அவா் பேசியதாவது,
“தமிழக மக்கள் இனியும் ஏமாற்றப்பட மாட்டார்கள். வரும் சட்ட மன்றத் தோ்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்பார் என்பதும் உறுதி. மத்திய அமைச்சர் அமித் ஷாவும் இதையேதான் கூறினார். முன்னாள் முதல்வா் ராஜாஜியால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட சேலம் மாவட்டத்தில்தான் கள்ளச்சாராயத்தால் பல போ் உயிரிழக்கின்றனா்.
இதையும் படியுங்கள் : “மேற்கு வங்கத்தில் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தை அமைக்க பாஜகவுக்கு வாய்ப்பு அளியுங்கள்” – பிரதமர் மோடி
தமிழகத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி கே.பழனிசாமி செய்த ஆட்சிபோல் தற்போது இல்லை. தமிழகத்தில் திமுக எப்போதும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததில்லை. கடந்த தேர்தலில் சில முறைகேடுகள் காரணமாக மட்டுமே திமுக ஆட்சிக்கு வந்தது. இப்போது, போலி வாக்குகளைத் தடுக்க பாஜகவும் அதிமுகவும் இணைந்து வாக்குச் சாவடி குழுக்களை அமைத்துள்ளோம். இனி ஒரு கள்ள ஓட்டு கூட போட முடியாது”
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.







