ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் விநியோகம் தொடக்கம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியதை அடுத்து அங்கு உற்பத்தியான ஆக்சிஜனுடன் டேங்கர் லாரி புறப்பட்டது. கொரோனா 2-வது அலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியதை அடுத்து அங்கு உற்பத்தியான ஆக்சிஜனுடன் டேங்கர் லாரி புறப்பட்டது.

கொரோனா 2-வது அலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழக்கும் நிகழ்வுகள், நடந்து வருகின்றன. ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் இப்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, அங்குள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ஆக்சிஜன் உற்பத்தி நேற்றிரவு தொடங்கியது. முதற்கட்டமாக 5 மெட்ரின் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அந்த ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று தொடங்கியது. ஸ்டெர்லைட் கண்காணிப்பு குழு தலைவரும், தூத்துக்குடி ஆட்சியருமான செந்தில்ராஜ், கொடியசைத்து துவங்கி வைத்தார். ஆக்சிஜன் நிரப்பிய முதல் டேங்கர் லாரி, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

‘முதற்கட்டமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து தேவைக்கேற்ப தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி யாகும் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட இருக்கிறது’ என்று ஆட்சியர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.