சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. சித்தாரா எண்டர்டெய்ன்மன்ட் தயாரித்துள்ள இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராதிகா, ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திலிருந்து இதுவரையில் ‘பட்டாம்பூச்சி’ மற்றும் ‘வெட்டிங் சாங்’ ஆகியவை வெளியாகியுள்ளன. மேலும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அத்தகவலின் படி ஆகஸ்ட் 2 ஆம் தேதி கோவையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.




