மேற்குவங்கத்திலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்!

மேற்குவங்கத்தில் இருந்து தமிழகத்துக்கு ரயில் மூலம், 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆக்சிஜன் விநியோகத்தை சீர்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், மேற்குவங்கத்தில் இருந்து 80…

மேற்குவங்கத்தில் இருந்து தமிழகத்துக்கு ரயில் மூலம், 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆக்சிஜன் விநியோகத்தை சீர்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், மேற்குவங்கத்தில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை, ரயில் மூலம் தமிழகத்துக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. துர்காப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில், நாளைக்குள் சென்னைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறித்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், இது தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யும், என நம்பிக்கை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.