முக்கியச் செய்திகள் குற்றம்

மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரர்

களக்காடு அருகே மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன். அசாம் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இவர் கடந்த 2017ம் ஆண்டு பிரேமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தால், சென்னையில் வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே மாரியப்பன் இரண்டாவதாக திருமணம் ஒன்றை செய்து கொண்டார். அதன்பின்னர் சில மாதங்களில் தனது முதல் மனைவியான பிரேமாவுடன் சமாதானம் செய்து அவ்வப்போது அவருடனும் வசித்து வந்துள்ளார். இதுகுறித்து தெரிந்து கொண்ட 2வது மனைவி மாரியப்பனை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரேமா அடிக்கடி பணம் கேட்டு மாரியப்பனை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், பிரேமாவை கொலை செய்து அருகில் உள்ள குளத்தில் புதைத்ததாக தெரிகிறது. பிரேமா பல நாட்களாக உறவினர்களை தொடர்புகொள்ளாததால் இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிரேமாவை கொலை செய்ததை மாரியப்பன் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக ஆட்சியில் ஒரு அணைகூட கட்டப்படவில்லை: துரைமுருகன்

EZHILARASAN D

பத்திரப்பதிவுத் துறையில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் – அமைச்சர் மூர்த்தி

Jeba Arul Robinson

திருச்சி: யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு நிதி

Arivazhagan Chinnasamy