இந்திய அணி வெற்றியை கொண்டாடிய தருணத்தில் ஊர்வசி ரவுத்தேலாவுக்கு வந்த பிரச்னை!

‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா தமிழ்நாட்டில் பிரபலமடைந்தார். தற்போது பல இந்தி படங்களில் நடித்து வரும் ஊர்வசி ரவுத்தேலா, அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறி ட்ரோல்களில் மாட்டிக் கொள்வார். இந்நிலையில்,…

‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா தமிழ்நாட்டில் பிரபலமடைந்தார். தற்போது பல இந்தி படங்களில் நடித்து வரும் ஊர்வசி ரவுத்தேலா, அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறி ட்ரோல்களில் மாட்டிக் கொள்வார்.

இந்நிலையில், நடிகை ஊர்வசி ரவுத்தேலா அகமதாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண திரைப்பிரபலங்கள் பலர் வந்தனர். இதில் நடிகை ரவுத்தேலாவும் பார்வையாளராக வந்திருந்தார். அப்போது அவர் தனது 24 கேரட் கோல்டு ஐபோனை தவறவிட்டுள்ளார். இது தொடர்பாக ஊர்வசி, அகமதாபாத் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்த புகார் மனுவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ஐபோன் தவறிய விபரத்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், யாராவது போனை பார்த்தால் தன்னை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/UrvashiRautela/status/1713518618313478375

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.