முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்விளையாட்டு

பாக். கிரிக்கெட் வீரருக்கு எதிரான ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம்: தயாநிதி மாறன் எம்.பி. விமர்சனம்!

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும், நடந்த போட்டி ஆக்கப்பூர்வமாக இருந்திருக்க வேண்டுமே தவிர, அழிவுப்பூர்வமாக இருக்க கூடாது என ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம் எழுப்பப்பட்டதற்கு தயாநிதி மாறன் எம்.பி. விமர்சனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,அண்ணா நகர் பகுதியில் உள்ள கிரசன்ட் மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1000 நபர்களுக்கு கல்வி உக்கத் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான ஊக்கதொகையுடன் புத்தகப்பைகள், பெண்களுக்கான தையல் இயந்திரம், குக்கர், ஐயன் பாக்ஸ், 10 மாற்று திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விழாவில் தயாநிதி மாறன் எம்.பி. மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன் மற்றும் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான இரு சக்கர வாகனங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட பரிசாக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் சார்பாக அமைச்சர் உதயநிதிக்கு புத்தகம் வழங்கப்பட்டது

பின்னர் விழா மேடையில் பேசிய தயாநிதி மாறன் எம்.பி. பேசியதாவது,

“அண்ணாநகர் என்ற பகுதியை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. கலைஞர் என்றும் அண்ணாவை மறக்க மாட்டார். எனவே அண்ணாநகர் என்றும் அவரை மறக்காது.  கருணாநிதியை போல் யாரையும் பார்க்க முடியாது. அவர் சூரியனுக்கு முன் எழுந்து, எல்லோரும் உறங்கிய பிறகு உறங்குவார். அவரை போன்ற ஒருவர் உண்டு என்றால் அது தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

நேற்றைய இந்தியா பாகிஸ்தான் போட்டியில் வீரர்கள் களமிறங்கும் போதும், வெளியேறும் போதும் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி ’ஜெய் ஸ்ரீ ராம் ஜெய், ஸ்ரீ ராம்’ என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதற்கு முன்பாக ஒரு முறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் இந்தியாவை வென்ற போது, மைதானத்தில் பார்வையாளர்கள் அவர்களை கைத்தட்டி வாழ்த்தினார்கள்.

இந்த இரண்டு சம்பவமும் மக்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை உணர்த்துகிறது
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும், நடந்த போட்டி ஆக்கப்பூர்வமாக இருந்திருக்க வேண்டுமே தவிர, அழிவுப்பூர்வமாக இருக்க கூடாது” இவ்வாறு பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகை

G SaravanaKumar

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா?- டிடிவி தினகரன் விளக்கம்

Web Editor

தலையிலேயே ஒரு மின்விசிறி ! வைரலாகும் அமிதாப் பச்சன் பகிர்ந்த இன்ஸ்டா வீடியோ

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading