நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் ரிஸ்வான் விக்கெட்டாகி பெவிலியன் திரும்பியபோது ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பபட்ட நிலையில் ‘#Sorry_Pakistan’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டாஸை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்கள் மட்டும் எடுத்து ஆல்அவுட் ஆனது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா, 30.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 86 ரன்களும், ஸ்ரேயாஸ் ஆட்டமிழக்கமால் 53 ரன்களும் அடித்தனர்.. உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி 8-வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள்,‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’என கோஷம் எழுப்பினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது எக்ஸ் தள பக்கத்தில் ‘#Sorry Pakistan’ என்ற ஹேஷ்டேக் மூலம் நேற்றைய சம்பவத்துக்கு பலரும் வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர். மேலும் 1999-ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெற்ற அந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒலித்த கரவொலிகள் குறித்த காணொலியை பகிர்ந்துள்ளார்.







