காவல் நிலையம் முன்பு படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய், மகன்

ஓமலூர் அருகே தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரிகள் மீது, தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையம் முன்பு படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய் மற்றும் மகன். சேலம்…

ஓமலூர் அருகே தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரிகள் மீது, தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையம் முன்பு படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய் மற்றும் மகன்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மானத்தாள் கிராமம் எம். ஓடைப்பட்டியை
சேர்ந்தவர் சசிகுமார். இவர் தனது தாயுடன் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி
காவல் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் காவல் நிலையத்தின்
தேசிய கொடி கம்பத்தின் கீழ் படுத்து கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, விவசாயியான தனது நிலம் மேட்டூர் உபரி நீர் நூறு ஏரிகள் இணைப்பு திட்டத்திற்கு எடுக்க படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அது குறித்த எந்த வித தகவலும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவிக்க வில்லை.

மேலும், நிலம் எடுப்பதற்கான அறிவிப்பும் செய்யவில்லை, ஆதரமும்  தரவில்லை. எனது நிலத்தை கைப்பற்ற தாசில்தாரும், கிராம நிர்வாக அலுவலரும் முயற்சி செய்கின்றனர்.
அதனால், நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம்.

நிலம் எடுப்பதை குறித்து கேட்டால், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க பட்டதாகவும், அங்கு சென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர். சரபங்கா நதிநீர்
திட்டத்தில் கொடுக்கின்ற பணத்தை வாங்கி கொண்டு நிலத்தை கிரயம் செய்துகொடு
என்று அடிக்கடி தொல்லை செய்கின்றனர் என புகார் அளித்தார்.

எனது நிலம் நல்ல விவசாய நிலம். வருடத்திற்கு 50 ஆயிரம் வருவாய் கொடுக்கும் பூமி என்பதால் எனது நிலத்தை தாசில்தாரும், கிராம நிர்வாக அலுவலரும் அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர். அதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் சமாதானம் செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

-ம. ஸ்ரீ மரகதம்

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.