உலக மகளிர் தினத்தை முன்னிட்டு யோக கலை பயிற்சியாளர் கல்பனா தனது இரண்டு கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி, பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அம்மை அப்பர் தொண்டு நிறுவனம் மற்றும்
சிவனடியார் சாதுக்கல் சேவை மையம் இணைந்து உலக மகளிர் தினத்தை கொண்டாடினர்.
இதை முன்னிட்டு, யோகா பயிற்சியாளர் கல்பனா தன்னுடைய இரண்டு கண்களை கருப்பு துணியினால் கட்டி இரு சக்கர வாகனத்தில் கிரிவல பாதை மேற்கொண்டார்.
இவர், செங்கம் ரோடு சந்திப்பல் இருந்து அபாய மண்டபம் வரை உள்ள 8 கிலோமீட்டர் தூரத்தை இருசக்கர வாகனத்தை ஓட்டி கடந்தார்.
அப்போது அவருடன் பெண்கள் மற்றும் ஆண்கள் செல்பி எடுத்து கொண்டனர்.இதன் மூலம்,பெண்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
FILENAME. TVM WOMEN’S DAY BLINDFOLDED AND VIGILANT ON A TWO-WHEELER .8.3.23
-ம. ஸ்ரீ மரகதம்







