2022ஆம் ஆண்டு கூகுள் தேடுபொறியில் ஆசிய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், நடிகைகள் காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகிய பிரபலங்கள் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் முன்னணியில் உள்ளனர்.
2022 இல் தமிழ் நடிகர்களில் அதிகம் தேடப்பட்டவர்களில் விஜய் முதலிடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் உள்ளனர்.
டோலிவுட் நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஷாருக் கான் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். விஜய், தனுஷ், சூர்யா, ரஜினிகாந்த் ஆகியோர் முதல் 100 இடங்களை பிடித்துள்ளனர்.
பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலா பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளார். உடல்நலக் குறைவால் காலமான பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 6வது இடத்திலும், காஜல் அகர்வால் 15வது இடத்திலும் உள்ளனர். விஜய் 22ஆவது இடத்தில் உள்ளார்.
நடிகை சமந்தா 18ஆவது இடத்திலும், நயன்தாரா 33வது இடத்திலும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
-மணிகண்டன்







