முக்கியச் செய்திகள் சினிமா

சம்பளத்தை உயர்த்தினார் நடிகை கீர்த்தி சுரேஷ் !

நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் அவருக்கான மார்க்கெட் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் தமிழில் ரஜினியின் ’அண்ணாத்த’, ’சாணிக் காயிதம்’ படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில், சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஹீரோசவாக நடிக்கும் ’சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இப்போது நானி ஜோடியாக ’தசரா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கீர்த்தி.

இதில் நடிக்க அவர் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இந்தப் படத்துக்காக அவர் ரூ.3 கோடி சம்பளமாக வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும் அதைக் குறைத்து ரூ.3 கோடியை கொடுத்திருப்பதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement:
SHARE

Related posts

’பப்ஜி’ மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்!

Gayathri Venkatesan

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Gayathri Venkatesan

ஒலிம்பிக்கில் பங்கேற்க டோக்கியோ சென்ற வீரருக்கு கொரோனா தொற்று!

Vandhana