வேலூரில் இருசக்கர வாகனத்தோடு சேர்த்து போடப்பட்ட சிமெண்ட் சாலை!

வேலூர் மாநகராட்சி சீர்மிகு நகராக (ஸ்மார்ட் சிட்டி) தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் இருசக்கர வாகனத்தையும் சேர்த்து சிமெண்ட் சாலை…

வேலூர் மாநகராட்சி சீர்மிகு நகராக (ஸ்மார்ட் சிட்டி) தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் இருசக்கர வாகனத்தையும் சேர்த்து சிமெண்ட் சாலை போடப்பட்டிருக்கிறது.

காளிகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா. இவரது இருசக்கர வாகனத்தை நேற்று இரவு வழக்கம் போல் கடை முன்பு நிறுத்திவிட்டு சென்றார். காலை எழுந்து வந்து பார்த்தபோது அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது.

தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது. தெருவோரம் நிற்க வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சேர்த்தும் சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போய் வாகனத்தை எடுக்க முயற்ச்சித்திருக்கிறார்.

ஆனால் சிமெண்ட் கலவை இருகிவிட்டதால் அவரால் இருசக்கர வாகனத்தை எடுக்க முடியவில்லை. பின்னர் போராடி உடைத்து வண்டியை மீட்டுள்ளனர்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.