முக்கியச் செய்திகள்தமிழகம்

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தொடரும் அதிசயம்

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக தட்டை வடிவிலான முதுமக்கள் தாழியின் மூடியும், அதில் பனை ஓலை அச்சும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார். அதன் முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடந்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த அகழாய்வு பணியில் 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதவிர தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம், சங்க கால வாழ்விடம் பகுதிகள், அம்புகள், வாள், ஈட்டி, சூலம், தொங்கவிட்டான் போன்ற தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அகழாய்வு பணியில் 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் சி சைட் என அழைக்கப்படும் 1903ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்த பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தற்போது வித்தியாசமான முதுமக்கள் தாழி மூடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனைத்து முதுமக்கள் தாழிகளின் மூடிகளும் கூம்பு வடிவில் இருக்கும். ஆனால் ஒரு முதுமக்கள் தாழியின் மூடி மட்டும் தட்டை வடிவில் உள்ளது. அந்த தட்டை வடிவில் உள்ள இடத்தில் பனை ஓலைப்பாய் அச்சுகள் உள்ளன. அந்த அச்சுகள் பனை ஓலையில் ஆனதா, அல்லது கோரைப்பாய் என அழைக்கப்படும் பாயால் ஆனதா என்ற விவரம் தெரியவில்லை. முதுமக்கள் தாழிகள் செய்யும் போது, அதனை காய வைப்பதற்கு இந்த பனை ஓலையில் மேல் வைத்திருக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே முன்னோர்கள் பனை மற்றும் பனை சார்ந்த பொருட்களை பயன்படுத்தியுள்ளது உறுதியாகி உள்ளது. தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் பழமையான நாகரித்தைச் சார்ந்த பொருட்கள் கிடைத்து வருவதால் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் உற்சாகமடைந்துள்ளனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

துரோகம் இழைத்தேனா? – குற்றச்சாட்டுக்கு ஷிண்டே விளக்கம்

Mohan Dass

லாரி, பேருந்து, கார் அடுத்தடுத்து மோதியதில் இரண்டு பேர் உயிரிழப்பு

Arivazhagan Chinnasamy

அமெரிக்காவில் மர்மநபர் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு: 22 பேர் உயிரிழப்பு!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading