பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”பாஜக ஐ.டி விங் நிர்வாகி வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பில் துணை முதலமைச்சரை கடுமையாக சாடி உள்ளார். தமிழ்நாடு காவல் துறை குறைந்தபட்ச நடவடிக்கையாவது துணை முதலமைச்சர் மீது எடுத்து இருக்க வேண்டும்.
ஒருகாலத்தில் கம்பியூனிஸ்ட் இயக்கம் ஏழை மக்களுக்கு போராடும். பொது வாழ்க்கையில் எளிமையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் கூட்டணியில் இணைந்து பின் திமுக பேசுவதை கம்பியூன்ஸ்ட் கட்சி பேசுகிறது. கம்பியூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஊதுகோலாக இருக்க வேண்டாம்.
போராட்டம் நடத்தி வந்த கறிக்கோழி விவசாயிகள் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருந்தனர். ஆனால் திமுக அரசு தேவை இல்லாமல் விவசாயிகளை கைது செய்து உள்ளது. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவற்றை பார்த்தால் திமுக ஆளும் கட்சியா அல்லது எதிர்கட்சியா என்ற சந்தேகமாக ஏற்பட்டுள்ளது. இன்னும் 50 நாட்கள் கழித்து வரக்கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயமாக இதற்கு தீர்வு தரும்.
டிடிவி தினகரன் என்னிடம் தொடர்ந்து பேசி கொண்டு இருக்கிறார். திமுக அகற்ற் வேண்டும் என்பதற்காக கூட்டணிக்கு வந்து உள்ளார். ஒ.பன்னீர்செல்வம் பொறுமைமிக்க தலைவர். அவர் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ள்து.
பிரதமர் மோடி சட்டபேரவை தேர்தலுக்கான ஆயுத்த பணிகளை தொடங்கி வைக்கிறார். போர் தொடங்கும் சங்கை ஊதி தொடங்கி வைப்பார். கூட்டணி கட்சி தலைவர்கள் மேடையில் இருப்பார்கள். தமிழ்நாடு தேர்தல் களத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சப்படும்.
ஏ ஆர். ரகுமான் ஒரு இசை மேதை. ஆஸ்கர் விருது வாங்கி உள்ளார். அவர் பேசியதில் சிலவற்றை எடுத்து பேசுவது எனக்கு உடன்பாடில்லை. ஏ.ஆர். ரகுமான் ராமாயணம் படத்திற்கும் இசை அமைக்கிறார். 10 ஆண்டுகளாக சினிமா மாறி இருக்கிறது என்பது அவரது கருத்ததாக உள்ளது. அவர் விளக்கம் தந்த பின் பிரச்சனை முடிந்ததாக பார்க்கிறேன். இதில் கனிமொழிக்கு என்ன பிரச்சனை.?” என்றார்.







