தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரம், பொதுக்கூட்டம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை போன்ற பணிகளை தொடங்கிவிட்டன.
இதனிடையே தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியானது கடந்த 2016 முதல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. ஆனால் திமுக ஆட்சியில் காங்கிரஸ் கட்சியானது நிபந்தனையற்ற ஆதரவௌ அளித்து வருகிறது.
இதனிடையே தவெக தலைவர் விஜய் கட்சியிம் முதல் மாநாட்டில் ஆட்சியிலும் பங்கு அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் தவெக கூட்டணியில் இணைய எந்த கட்சியும் ஆர்வம் காட்ட வில்லை. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி நிர்வாகியும் ராகுல் க்காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்ரவர்த்தி, தவெக தலைவர் விஜயை சந்திப்பு நடத்தினார்.
இது திமுக கூட்டணிக்குள் சர்ச்சையை உண்டாக்கின. மேலும் எதிர்கட்சிகளும் திமுக கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதாக விமர்சித்தன.
இதற்கிடையில் டெல்லியில் தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் செல்வபெருந்தகை, கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என்றும் கூட்டணி குறுத்து நிர்வாகிகள் யாரும் பொது வெளியில் கருத்து தெரிவிக்க கூடாது என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையமானது தவெகவிற்கு விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் காந்தி பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், ” தமிழ்நாட்டின் 2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது! அனைத்து கட்சிகளும் இப்போது Ready… Set… Go!” என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவானது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.







