மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் : நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நேரில் ஆய்வு!

மருத்துவக் கழிவுகள் மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் தொடர்பாக  நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்…

மருத்துவக் கழிவுகள் மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் தொடர்பாக  நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துகல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவ கழிவுகள் மருத்துவமனை வளாகத்திலேயே எரிக்கப்படுவதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கான  விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல நாட்களாக மருத்துவ கழிவுகள் மருத்துவமனை வளாகத்தில் எரிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அவை மருத்துவ கழிவுகள் இல்லை என்றும்.. இன்று காலை யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த தனியாக பயோ வேஸ்டேஜ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ்  தொலைக்காட்சியில் இன்று செய்தி வெளியானது. நியூஸ் 7 தமிழ் செய்தியின் எதிரொலியாக அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கண்காணிப்பாளர்கள் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்

மேலும் இவை அனைத்துமே சாதாரண குப்பைகள் எனவும்  இங்கு தீ வைத்ததற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.