லியோ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாடலான ‘நா ரெடி’ பாட்ல் வெளியாகி வைரலாகியுள்ளது.இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யாப், லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. காஷ்மீரில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிடில் காஷ்யாப் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.






