ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ராஜஸ்தானிடம் மும்பை அணி கேட்கும் நட்சத்திர வீரர்…!

ராஜஸ்தான் அணியிடம் மும்பை அணி ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஜெய்ஸ்வாலை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணியில் விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா கடந்த சில சீசன்களுக்கு முன்பு புதிதாக உருவாக்கப்பட்ட குஜராத் அணிக்காக விளையாடினார். இதனையடுத்து அவரை மீண்டும் வாங்கிய மும்பை நிர்வாகம் ஹர்திக் பாணிடயாவை மும்பை அணியின் கேப்டனாக்கியது. கேப்டனாக இருந்த ரோஹித் ஷர்மாவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கும் சக வீரர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 2026 ஐபிஎல் சீசனில் மும்பை அணி மோசமாக விளையாடியது. ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த சீசன் படு மோசமாக அமைந்தது. இதனால் ஹர்திக் பாண்டியா அந்த அணியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேறையதை அடுத்து கேப்டன் பொருப்பு ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணியின் நிர்வாகம் கேப்டன் பதவியை ரியான் பராக்கிற்கு வழங்கியது. அதேபோல பேட்டிங்கில் 15 வயதே ஆன சூரியவன்ஷி, ஜெய்ஸ்வாலை விஞ்சி ஆடி வருகிறார். இதனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் பிராகாசிக்க முடியாமல் உள்ள ஜெய்ஷ்வால் தனக்கென ஒரு இடத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில், மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் இன்னும் சில ஆண்டுகளில் வெளியேற வாய்ப்புள்ளதால் சூர்யகுமார் யாதவ் புதிய அணியை தேடிக்கொண்டிருக்கிறார். இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் களமிறங்க வாய்ப்புள்ள வீரரான ஜெய்ஸ்வால், ஒரு கவர்ச்சிகரமான தீர்வாகத் தெரிகிறார். ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு வேறு ஒரு அணியும் கேப்டன் பதவி தர தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்பை அணி அவருக்கு கேப்டன் பதவியையும் வழங்கத் தயாராக இருக்குமா? டி20 லீக்கின் அடுத்த கட்டம், வீரர் பரிமாற்றக் கண்ணோட்டத்தில் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.