ஊழலில் மட்டுமே திமுக அரசு முதலிடம் – அன்புமணி ராமதாஸ் பேச்சு….!

ஊழலில் மட்டுமே திமுக அரசு முதல் இடத்தில் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிதாவது ;

“2047 இல் இந்தியாவை வல்லரசாக மாற்ற அழைத்துச் செல்பவர் பிரதமர் நரேந்திர மோடி. ஐந்தாண்டுகளில் பல விஷயத்தில் திமுக அரசு பூஜ்ஜியம் . கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீர்வளத் திட்டம் பூஜ்ஜியம், மருத்துவ கல்லூரி பூஜ்ஜியம். புதிய மின் திட்டம் பூஜ்ஜியம். இப்படி எல்லாவற்றிலும் பூஜ்ஜியம். ஊழலில் மட்டும் இந்தியாவிலேயே முதல் இடத்தில் திமுக உள்ளது.
ஊழல் என்றாலே அதற்கு மறுபெயர் திமுக அரசு.

மணல் கொள்ளை, நகராட்சி துறையில் ஊழல், பணியிட மாற்றத்தில் ஊழல், டாஸ்மாக் ஊழல், வரி ஏய்ப்பில் ஊழல், கனிம ஊழல், நெல் கொள்முதலில் ஊழல் என இப்படி ஒவ்வொரு துறையிலும் ஊழல்.

முதலமைச்சர் வாயை திறந்தாலே பொய். திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில் 66 வாக்குறுதிகள்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால் 13 சதவீதம்தான். தேர்வில் கூட 35 மதிப்பெண்கள் எடுத்தால்தான் பாஸ். ஆனால் திமுக 13 மார்க் எடுத்து பெயில் ஆகியுள்ளது. அப்படி ஃபெயிலான திமுக மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது.

அனைத்து கிராமங்களிலும் போதைப் பொருள்கள் கிடைக்கின்றன. திமுக அரசு ஊழலில் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது, திமுக ஆட்சியை அகற்றுங்கள். இன்னும் 2 மாதங்களில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார்.” எனப் பேசியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.