செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது :
”2026 ஆம் ஆண்டின் முதல் தமிழக வருகை இது. சில நாட்கள் முன்பு தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி மனிதன் பாரத் ரத்னா விருது பெற்ற எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை நாம் கொண்டாடினோம். இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாளும் கூட. தேசம் இந்த நாளை பராக்கிரமத்திருநாள் என்ற வகையிலே கொண்டாடி மகிழ்கின்றது. வீரம் மற்றும் நாட்டுப்பற்று ஆகியவை தமிழ்நாட்டு மக்களின் நாடி நரம்புகளிலே பெருக்கெடுத்து ஓடுகின்றது
இந்த புனிதமான மண்ணிலிருந்து நான் நேதாஜி சுபாஷுக்கு நினைவாஞ்சல்களை காணிக்கையாக்குகின்றேன். நண்பர்களே இங்கே அலைகடல் என திரண்டு இருக்கும் மக்கள் வெள்ளம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் தேசம் அனைத்திற்கும் கூட ஒரு செய்தியை அளிக்கிறது. தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்கு தயாராகிவிட்டது. திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட துடிக்கிறது என்பதே அது.
தமிழ்நாடு இப்போது பிஜேபியின் என்.டி.என் அரசினை விரும்புகிறது. இந்திய குடும்பத்தின் நம்முடைய மூத்த தலைவர்கள் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இந்தப் மேடையில் கூடியிருக்கின்றார்கள். இந்த நண்பர்கள் அனைவரும் தமிழ்நாட்டை திமுக அரசிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்கிற உறுதிப்பாட்டோடு உள்ளனர்.
திமுக அரசை சிஎம்சி ( CMC) அரசு என அழைக்கின்றனர். சிஎம்சி என்றால் கரப்சன், மாபியா, கிரைம் என்று அர்த்தம். தமிழ் நாட்டு மக்கள் திமுக மற்றும் சிஎம்சி இரண்டையும் கிள்ளி எறிய வேண்டும் என தீர்மானம் செய்துவிட்டனர். தமிழகத்தில் தேஜவின் இரட்டை இன்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது.
தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த பாதுகாப்பான ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். திமுக அரசாங்கத்தின் முடிவுரைக்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது.
2014 ஆம் ஆண்டு முன்பாக காங்கிரஸ் – திமுக ஆட்சியின் போது தமிழ் நாட்டிற்கு மிகக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் என்டிஏ அரசு அதிகாரப் பகிர்வு வாயிலாக மட்டும் கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் கோடி நிதியை அளித்துள்ளது. இது மட்டுமல்ல, கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக ரூ. 11 லட்சம் கோடி உதவிகளை அளித்திருக்கிறது. காங்கிரஸ் – திமுக அரசாங்கம் ரயில்வே பட்ஜெட் என்ற பெயரில் தமிழ்நாட்டு அளித்த தொலையைவிட, என்டிஏ அரசாங்கம் 7 மடங்கு அதிகமான நிதியை அளித்து வருகிறது.







