19 வது ஐபிஎல் தொடரானது வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில் ‘இந்தியன் பிரீமியர் லீக்’ என்ற பெயரை பிசிசிஐ பயன்படுத்துவதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இது தொடர்பாக எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஆஷிக் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் ”ஐபிஎல் என்பது நாட்டின் அதிகாரப்பூர்வ கிரிக்கெட் தொடர் அல்ல என்றும், பிசிசிஐ ‘இந்தியன் பிரீமியர் லீக்’ என்ற பெயரைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் முறையிட்டிருந்தார்.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சௌமென் சென் மற்றும் நீதிபதி ஷ்யாம் குமார் வி.எம். ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.







