ஓபிஎஸ் இல்லம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த…

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த மாதம் 25ம் தேதி காலமானார். அவரின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்டோர் ஓ.பன்னீர் செல்வத்தை மதுரையில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தாயாரின் மறவையொட்டி அவருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு சென்றார். அங்கு ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த முதலமைச்சர் அவரின் தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் உடன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்

ஓ.பன்னீர்செல்வம் உடன் பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.