தேசிய நெடுஞ்சாலையில் எரிக்கப்படும் குப்பைகள்-பொதுமக்கள் அவதி!

ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் டன் கணக்கில் கொட்டி எரிக்கப்படும் குப்பையால் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் – பழனி நெடுஞ்சாலைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள்,…

ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் டன் கணக்கில் கொட்டி எரிக்கப்படும்
குப்பையால் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் – பழனி நெடுஞ்சாலைப் பகுதியில்
பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், பழக்கழிவுகள், காய்கறி கழிவுகள் மற்றும்
ஆபத்தான மருத்துவக் கழிவுகள் உட்பட டன் கணக்கில் கொட்டி தீ வைத்து
எரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் வெளியேரும் புகையால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக இதில் மாவட்ட
நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.