நாளை வெளியாகும் ‘ஹாய்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல்…!

ஹாய் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகிறது.

நயன்தாரா, கவின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹாய்’. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கும் இப்படத்தை ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இத்திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகின.

இந்த நிலையில் ஹாய் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.