பெண் காவலர்கள் நலனுக்காக “நவ ரத்தின” அறிவிப்புகள்!

ரோல் கால் நேரம் மாற்றம், பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி உள்ளிட்ட 9 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். தமிழக காவல் துறையில் 1973-ஆம் ஆண்டில் இருந்து பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அதனால்…

ரோல் கால் நேரம் மாற்றம், பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி உள்ளிட்ட 9 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

தமிழக காவல் துறையில் 1973-ஆம் ஆண்டில் இருந்து பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அதனால் இந்தாண்டு தமிழக மகளிர் காவல் துறைக்குப் பொன்விழா ஆண்டு ஆகும். இந்த பொன்விழா ஆண்டையொட்டி தமிழ்நாடு காவல்துறை சார்பாக, மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பு தபால் தலையை வெளியிட்டு, பிறகு ரூபாய் 8.5 கோடி செலவில் பெண்கள், குழந்தைகள் விழிப்புணர்வுக்கான “அவள்” திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து, சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 700 கி.மீட்டத் சைக்கிள் பேரணியயையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, பெண் காவலர்களுக்கான 9 அறிவிப்புகளை வெளியிட்டார்.

1. ரோல் கால் என்ற காவல் வருகை அணிவகுப்பு 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம் .

2. சென்னை, மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் .

3. அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனி ஓய்வு அறை .

4. தேவையான அனைத்து இடங்களிலும் காவல் குழந்தைகள் காப்பகம் .

5. கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும் அறிமுகம் .

6. பெண் காவலர்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு மற்றும் பணியிட மாறுதல்                        வழங்கப்படும்.

7. பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டிகள் நடத்தப்படும்.

8. பெண் காவலர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தேசிய மாநாடு ஆண்டு தோறும்              நடத்தப்படும்.

9. பெண் காவலர்களின் நலனுக்காக பணி ஆலோசனை குழு அமைக்கப்படும்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.