மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
தமிழ் நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டின் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சென்னை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.




